Tuesday, February 8, 2011

Isha Yoga with Sathguru in Chennai -25,26,27 March 2011






                                           வாருங்கள்..உங்களில் மலருங்கள்......
இஷா யோகா - சத்குருவுடன் மூன்று நாட்கள் (தமிழில் )


Isha Yoga program conducted in Tamil by Sathguru - A rare opportunity !
Date: 25 to 27 Mar 2011
Location: Pachayappa College Grounds
Poonamallee High Road, Chennai India
Details: This program is conducted by Sathguru
Contact 1: Phone 9789983260
Email: chennai@ishafoundation.org
Contact 2: Phone 044-24333185

Sunday, February 6, 2011

மூன்றாவது கோணம்

படித்ததில் பிடித்தது


மூன்றாவது கோணம் 


சத்குருவிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரது நகைச்சுவையும் பகுத்தறிந்து விளக்கும் எளிமையான நடையும். அவை எல்லாமே இந்த புத்தகத்தில் நிறைய கிடைகிறது. இந்த புத்தகத்தை எடுத்து ஒரே மூச்சில் நான் படித்து முடித்தேன் -- ஒரு துப்பறியும் கதையை படிப்பது போல். 
அவ்வளவு சுவாரசியம்...
உதாரணத்திற்கு  சில...........


1. பூனை குறுக்கே போனால் சகுனம் சரியில்லை...

.நகரங்கள் உருவாகாத பழைய தினங்களில், காட்டுப்பாதையில் மக்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் மாட்டு வண்டி மூலமாகவும் நடந்தும் தங்கள் பயணத்தை அவர்கள் மேற்கொண்டார்கள். ' புலி போன்ற பூனை இன மிருகம் குறுக்கில் கடந்தால், அது புதரில் பதுங்கி இருக்கலாம். உங்களையோ உங்கள் வாகனத்தை இழுக்கும் மிருகங்களையோ குறி வைத்து அது பாயக்கூடும். சற்று நேரம் பொறுத்து பயணத்தை தொடர்வது நல்லது' என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். 

இன்றைய தினத்தில் இது அபத்தமான நம்பிக்கை. 

மோட்டார் வாகனங்கள் விரையும் நகரத்தில், பூனை குறுக்கே போனால் அதற்குத்தான் சகுனம் சரியில்லை; ஏதாவது வண்டியில் அடி பட்டு சாகும். 

2. ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்..

மிகக் கொடூரமான நம்பிக்கை .


பொருளாதாரம் எப்போதும் சில தந்திரங்களை கையாளும். 
குடும்ப வருமானத்துக்கு விவசாயத்தை மட்டும் நம்பியிருந்த காலத்தில், ஆண் குழந்தைகள் வளர்ந்து, உழவுக்கு கை கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்கும் பொறுப்பு தந்தைகளுக்கு பாரமாக இருந்தது. 


இன்றைய உலகில் அப்படி எந்த அவசியமும் இல்லாமல் போய் விட்டது. சொல்லப்போனால் படிப்பிலும், பொறுப்பிலும் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளை விட பல விதத்தில் முன்னணியில் இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. 


ஐந்து புத்திசாலியான மகள்கள் இருந்தால் உங்கள் வாழ்க்கையை ஆனந்த மயமாக்கி விடுவார்கள்.  


மாறாக ஐந்து ஒற்றுமைஅற்ற மகன்களுக்கு நீங்கள் தந்தையாக இருந்து விட்டால் அவர்கள் குடும்பத்தையே நாசமாக்கி விடக்கூடும். 


உண்மையில் ஐந்து பெண்களைப் பெற்றால், ஆண்டியும் அரசனாவான் என்பதே என் கருத்து.






Thursday, January 27, 2011

Re- Telecast of Ananda Alai Chennai in Sri Sankara TV



Please do not miss the  re-telecast of the Live program of Ananda Alai Chennai in Sri Sankara Channel on the following days:

26, 27 and 28th Jan 2011 at 19:00 to 20:00 PM.

(also at time 01:00 AM to 02:00 AM!)

Sri Sankara TV _live telecast of Ananda Alai



Courtesy : devangar / Sri Sankara TV

Saturday, January 8, 2011

Project Green Hand at Chennai- Inauguration- Chennai Mayor, Actor Surya, Director K.S.Ravikumar and other distinguished Guests

Please visit our Green Hands page for viewing the photos on inauguration of Project Green Hand in Chennai and the related news.




Ananda Alai Tamil Nadu photos with alai alai song....

Please visit the following site of Isha Foundation to enjoy the photos of Ananda Alai Maha Sathsangam of Tamil Nadu all places - images of emotion and devotion..........


http://www.ishafoundation.org/public/Anandha-Alai-2011-Photo-Gallery/#


Few touching snaps as samples..........







I was touched by the above photo of small girl of Salem shedding tears of joy and devotion at sathguru's dharshan.......





===========================================


Click below for Alai Alai Alai song that melts anybody's heart..................


Wave of Bliss - Ananda Alai by ishafoundation

Monday, January 3, 2011

ஆனந்த அலைகளில் மிதந்தோம்...

ஆனந்த அலைகளில் மிதந்தோம்.........
(கருணை) மழையில் நனைந்தோம்...
எங்களுள் மலர்ந்தோம்.....
தரிசனம் கிடைத்தது........
பரவசம் நிகழ்ந்தது.......

ஜனவரி 2 மாலை YMCA மைதானத்தில் திட்டமிட்டபடி அவை  யாவும் சிறப்பாக நிகழ்ந்து விட்டது.
பசுமைக் கரங்கள் இயக்கம் துவக்கப் பட்டது.
 சத்குருவின் ஆன்மீக உரை எப்போதும்போல் எளிமையாகவும், பொருள் செறிந்தும், கதைகளும் நகைச்சுவையும் நிறைந்தும் அனைவரையும் கட்டிப்போட்டது.
 த்யான நிகழ்வில் உள்ளம் மலர்ந்து தன்னிலை மறந்தவர்கள் பல்லாயிரம். 
கேள்வி பதில் நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
 சத்குருவின் தரிசனம்,  சிறப்பு நடைபாதையில்  நளினமாகவும் தெய்வீகமாகவும் ஆடி நடந்தது எல்லாம்,   மழை அலைகளையும் மீறி ஆனந்த அலைகளை எழுப்பியது. 


ஒவ்வொருவர் வாழ்விலுள் மறக்க முடியாத தருணமாக இது பதிக்கப்பட்டது.


தன்னார்வ தொண்டர்கள் தனக்கு அளிக்கப்பட சேவைகளை மிக சிறப்பாக ஆற்றி பேரானந்தம் அடைந்தார்கள். தங்களுடைய பணிகளுக்கு நடுவே அப்பப்போது கிடைக்கும் குருவின் தரிசனமும் அவரது குரலும் எல்லா அண்ணாக்களுக்கும் அக்காக்களுக்கும் ஊக்கத்தை தந்தது.
-----------------------
தன்னார்வ தொண்டர்களோடு சத்குரு பேசும்போது அலை கடலென மகிழ்ச்சி ஆரவாரம்..
சத்குரு கருணையுடன் கூறியது:  நீங்கள்லாம் மழையில ஏற்க்கனவே ரொம்ப நனைஞ்சுட்டீங்க ..உங்களை மேலும்  கஷ்டப்படுத்த  விரும்பலை..
தொடர்கள் ஆர்வத்துடன் கூறியது:  சத்குரு, நாங்கள்லாம் கரைஞ்சு போக மாட்டோம் ..தயவு செய்து பேசுங்க..




கூப்பிய கையும்,  கொவ்வை செவ்வாயில் குறும் சிரிப்பும் கொண்டு
தெய்வீக இசையின் பின்னணியில் குரு ஆடிக்கொண்டே சென்று திரும்பிய போது ஆடாத  மனமும் உடலும் அங்கே இல்லை.


 மழை என்னங்க மழை..நனைஞ்சா கரைஞ்சா போயிடுவோம்?
நேற்றுதான் புதிதாக பிறந்து, மனம் என்னும் பூ மலர்ந்து, கைகளில் இரண்டு மறக்கன்றுகளோடு வீடு திரும்பினேன்!  அது போதுமே !


-ராஜன்