குரு வாசகம்


எல்லாவற்றையும் படைத்தவன் உங்களுக்குள்தான் இருக்கிறான். படைப்பின் மூலம் உங்களுக்குள்தான் உயிர்ப்புடன் துடித்துக்கொண்டிருக்கிறது.


அதை கவனிக்காமல் வேறு எதைப்பற்றி சிந்தித்துக்கொண்டு  இருக்கிறீர்கள்?
---------------------


உள்ளதை உள்ளபடி பார்க்க இயலாமல் மனம் பூசிய சாயங்களோடு பார்ப்பதே உங்கள் பிரச்னை !


-----------------------
அரை மனதோடு அணுகும்போது தெய்வீகம் தன்னை வெளிப்படித்திக்கொள்வதில்லை. அரைகுறை முயற்சிகளால் தன்னை உணர்தல் நிகழப்போவதும் இல்லை. அந்த தேடலில் உங்களை முழுமையாக அர்ப்பணிக்கும்போது, ஒற்றை  கணத்தில் அது நிகழ்ந்து விடும்.


-----------------------------------------


உங்களிடம்மனித நேயம் ஊற்றெடுத்துப் பெருகும்போதுதான் தெய்வீகம்மலரும். 
வளமான மனிதத்தன்மையே இல்லாதபோது உங்களுக்குள் தெய்வீகம் எப்படி மலரும்?

----------
ஆனந்தமாக வாழத் தெரியாமல் இருப்பதே ஒரு மனிதன் செய்யக்கூடிய மாபெரும் குற்றம் ! 





அமைதியும் மகிழ்ச்சியும் கடைகளிலோ காடுகளிலோ கிடைப்பவை அல்ல. வை உங்களுக்குள்ளேயே வேரூன்றி உள்ளவை!

-----------


தீவிரமாக உழைப்பவனுக்குத்தான் ஓய்வின் உண்மை அர்த்தம் புரியும் !
----------------
வானவில்லின் பல வண்ணங்களும் ஒரு தூய ஒளியிலிருந்தே விளைகின்றன. அதே  போல, உலகில் உள்ள பல மதங்களும் ஒரே தெய்வீகத்தின் வெளிப்பாடுகளே!      
----------------------

அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றால் இன்று நமக்கு நாமே ஆபத்துக்கும் அழிவுக்கும் வழிகோலிக்கொண்டு இருக்கிறோம். வேறு வழி இல்லை.  சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆன்மீகத்தில் ஈடுபட்டால் ஒழிய இந்த உலகத்துக்கு உய்வு கிடையாது!





-------------------------

Courtesy: 'Guruvaasagam'- book in Tamil by Isha Foundation



















நிகழ் காலம் என்று ஒன்று இல்லாத மனிதர்களுக்கு எதிர் காலம் என்பதே கிடையாது.

-----------------------
குழந்தை வளர்ப்பில் நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் என்னவென்றால் பழுதுபட்ட உங்கள் உள்ளங்களின் பாதிப்பு அவர்களுக்கும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுதான்.
-------------------
Picture courtesy: www.wallpapersphere.com

உங்கள் மனதில் நீங்கள் உருவாக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் தருவதன் மூலம் வாழ்க்கையை தவற விடுகிறீர்கள். 

--------------------------------------------------
நன்றி: காட்டுப்பூ ஜனவரி 2011