ஆனந்த அலைகளில் மிதந்தோம்.........
(கருணை) மழையில் நனைந்தோம்...
எங்களுள் மலர்ந்தோம்.....
தரிசனம் கிடைத்தது........
பரவசம் நிகழ்ந்தது.......
ஜனவரி 2 மாலை YMCA மைதானத்தில் திட்டமிட்டபடி அவை யாவும் சிறப்பாக நிகழ்ந்து விட்டது.
பசுமைக் கரங்கள் இயக்கம் துவக்கப் பட்டது.
சத்குருவின் ஆன்மீக உரை எப்போதும்போல் எளிமையாகவும், பொருள் செறிந்தும், கதைகளும் நகைச்சுவையும் நிறைந்தும் அனைவரையும் கட்டிப்போட்டது.
த்யான நிகழ்வில் உள்ளம் மலர்ந்து தன்னிலை மறந்தவர்கள் பல்லாயிரம்.
கேள்வி பதில் நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
சத்குருவின் தரிசனம், சிறப்பு நடைபாதையில் நளினமாகவும் தெய்வீகமாகவும் ஆடி நடந்தது எல்லாம், மழை அலைகளையும் மீறி ஆனந்த அலைகளை எழுப்பியது.
ஒவ்வொருவர் வாழ்விலுள் மறக்க முடியாத தருணமாக இது பதிக்கப்பட்டது.
தன்னார்வ தொண்டர்கள் தனக்கு அளிக்கப்பட சேவைகளை மிக சிறப்பாக ஆற்றி பேரானந்தம் அடைந்தார்கள். தங்களுடைய பணிகளுக்கு நடுவே அப்பப்போது கிடைக்கும் குருவின் தரிசனமும் அவரது குரலும் எல்லா அண்ணாக்களுக்கும் அக்காக்களுக்கும் ஊக்கத்தை தந்தது.
-----------------------
தன்னார்வ தொண்டர்களோடு சத்குரு பேசும்போது அலை கடலென மகிழ்ச்சி ஆரவாரம்..
சத்குரு கருணையுடன் கூறியது: நீங்கள்லாம் மழையில ஏற்க்கனவே ரொம்ப நனைஞ்சுட்டீங்க ..உங்களை மேலும் கஷ்டப்படுத்த விரும்பலை..
தொடர்கள் ஆர்வத்துடன் கூறியது: சத்குரு, நாங்கள்லாம் கரைஞ்சு போக மாட்டோம் ..தயவு செய்து பேசுங்க..
கூப்பிய கையும், கொவ்வை செவ்வாயில் குறும் சிரிப்பும் கொண்டு
தெய்வீக இசையின் பின்னணியில் குரு ஆடிக்கொண்டே சென்று திரும்பிய போது ஆடாத மனமும் உடலும் அங்கே இல்லை.
மழை என்னங்க மழை..நனைஞ்சா கரைஞ்சா போயிடுவோம்?
நேற்றுதான் புதிதாக பிறந்து, மனம் என்னும் பூ மலர்ந்து, கைகளில் இரண்டு மறக்கன்றுகளோடு வீடு திரும்பினேன்! அது போதுமே !
-ராஜன்